- முதலில் கோதுமை மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும். அதில் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து அரை கப் அளவிற்கு சுடு தண்ணீரை சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
- சப்பாத்தி மாவு விட கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- மாவை பிசைந்த பிறகு முறுக்கு பிழியும் அச்சில் ஓட்டை பெரிதாக இருக்கும் அச்சை வைத்து கொள்ளவும் அதில் பிசைந்த வைத்திருக்கும் மாவை போட்டுக்கொள்ள வேண்டும்.
- இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நான்கு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை சேர்த்து தண்ணீர் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
- தண்ணீர் கொதித்ததும் முறுக்கு அச்சில் மாவை போட்டு அதை அந்த தண்ணீரில் பிழிந்து விட வேண்டும்.
- இது ஒரு 10 நிமிடம் வேகட்டும்.
- பத்து நிமிடத்தில் கோதுமை மாவு நூடுல்ஸ் வெந்துவிடும்.
குழந்தைகளுக்கான ஹெல்த்தியான டேஸ்ட்டியான''கோதுமைநூடுல்ஸ்''!.
0 Comments