அடிக்கிற வெயிலுக்கு இந்த மாறி நீங்களே வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எளிமையான சுவையான பிஸ்கட் ஐஸ் கிரீம் செஞ்சு பாருங்க!
வெயில் காலமா இது? என்று நீங்களே அசந்து போகும் வகையில் குளுகுளுனு ஐஸ் கிரீம்!!!
அந்த அளவுக்கு சுவையாக இருக்கும். ஒரு முறை செஞ்சு பாருங்க அசந்து போவீங்க!!!
தேவையான பொருள்கள்
1. காய்ச்சிய பால் தேவையான அளவு 2. உங்களுக்கு பிடித்த கிரீம் பிஸ்கட் சிறிதளவு 3. சாக்லேட் சிறிதளவு (Dairy Milk or Any Chocolate) 4. இனிப்புக்கு தகுந்தவாறு சர்க்கரை
செய்முறை
1. முதலில் தண்ணீர் ஊற்றாமல் பாலை நன்கு காய்ச்ச வேண்டும்.பின்பு அதை ஆற விட வேண்டும்.
2. மிக்சியில் உங்களுக்கு பிடித்த கிரீம் பிஸ்கட்டை உடைத்து அதில் இனிப்புக்கு தகுந்தவாறு சர்க்கரை சேர்த்து போடவேண்டும். அதை நன்கு பொடியாக அரைக்கவேண்டும்.
3. பின்பு சிறிது சிறிதாக காய்ச்சிய பாலை மிக்சியில் ஊற்றி அரைக்கவேண்டும்.
4. எல்லாம் அரைத்த பிறகு, அடுப்பில் சிறிதளவு பாலை காய்ச்சி அதில் இந்த கலவையை ஊற்றி நன்கு கிண்டவும். அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.
5. கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். நன்கு ஆற விடவும். ஆறிய பிறகு மிக்சியில் போட்டு மீண்டும் அரைத்துக்கொள்ளவும்.
6. அதில் உங்களுக்கு தேவையான அளவு சாக்லேட் சிறிதளவு (Dairy Milk or Any Chocolate) சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
7. இந்த கலவையை காற்று போகாத பாக்ஸில் போட்டு பிரிட்ஜ் யில் 6 மணி நேரம் வைக்கவும்.
8. பின்பு அதை மீண்டும் எடுத்து கிளறி அதில் தேவையான அளவு சாக்லேட் தூவி மீண்டும் பிரிட்ஜ் யில் 6 மணி நேரம் வைக்கவும்.
0 Comments