Main Menu

வாங்க மக்களே !!!!!!! வெறும் 5 நிமிடத்தில் சுவையான இலகுவான பருப்பு சோறு செய்யலாம் வாங்க

வாங்க மக்களே !!!!!!! வெறும் 5 நிமிடத்தில் சுவையான இலகுவான  பருப்பு  சோறு  செய்யலாம் வாங்க

தேவையான  பொருட்டுகள்

அரிசி - 1 கப்,
பருப்பு - 1/2 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன் ,
நெய் - 1  டீஸ்பூன்
கடுகு - 1  டீஸ்பூன்,
சீரகம் - 1  டீஸ்பூன்,
மிளகாய் வத்தல் - 2 எண்ணம் ,
காயா போடி - 1/4  டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு,
வெங்காயம் - 1 (நறுக்கியது),
பூண்டு - 10 (உரித்தது),
தக்காளி - 1 (நறுக்கியது),
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1  டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்,
கொத்தமல்லி தழை - சிறிதளவு(நறுக்கியது).

செய்முறை:

1. அரிசி மற்றும் பருப்பை முதலில், 3 முறை கழுவவும்.
2. அதன் பிறகு, ஒரு பிரஷர் குக்கரை எண்ணெயுடன் சூடாக்கவும். சூடானதும் கடுகு, மிளகாய், உளுத்தம் பருப்பு, சனா பருப்பு சேர்த்து மிருதுவாக வறுக்கவும். பிறகு சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
3. அதன் பிறகு, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும்.
4. அதன் பிறகு, தக்காளி, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
5. மேலும் தக்காளி மென்மையாக மாறும் வரை வதக்கவும். பிறகு சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
6. பிறகு, தண்ணீரில் வடிகட்டிய அரிசி மற்றும் பருப்பு சேர்க்கவும்.
7. மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
8. அதன் பிறகு தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
9. மிதமான தீயில் 3-4 விசில் வரும்வரை வேக  வைக்க வேண்டும்

இதோ அரிசி பருப்பு சாதம் தயார் 

Post a Comment

0 Comments