வாழைப்பழ பான்கேக் சுவையாக சுலபமாக இப்படி செய்யுங்க-Banana cake
தேவையான பொருட்டுகள்
மைதா மாவு - 3 கப்
முட்டை - 3
பால் - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழம் -5
செய்முறை
முதலில் வாழைப் பழத்தை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்துள்ள மைதா மாவு சக்கரை பேக்கிங் பவுடர் ஒரு பின்ச் உப்பு மற்றும் அரைத்து வைத்த வாழைப்பழம் மிஸ் சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு இதனை நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு பால் சேர்த்து இட்லி மாவை விட கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். கேக் மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
ஒரு பேனை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி ஊத்தாப்பம் போல ஊற்றி மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
பின்பு அதை திருப்பி போட்டு மீண்டும் ஒரு நிமிடம் மட்டும் வேகவிட்டு எடுக்கவும். இப்போது மிகவும் மிருதுவான பனானா பேன் கேக் தயார்.தேவையெனில் சிறிது தேன் சேர்த்து கூட சாப்பிடலாம்.சுவை நன்றாக இருக்கும்.
0 Comments