சுவையான நோன்புகஞ்சி செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
1.சீரக சம்பா அரிசி - ½ கப்
2.பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
3.வெங்காயம் - 1
4.தக்காளி - 1
5.கேரட் - 1
6.இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்
7.புதினா இலைகள் - 1/4 கப் (நறுக்கியது)
8.கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
9.தேங்காய் பால் - ½ கப்
10 தேங்காய் பால் - ½ கப்
11.தண்ணீர் - 3 கப்
12.உப்பு - தேவையான அளவு
13.மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
14.மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
15.கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்
3.வெங்காயம் - 1
4.தக்காளி - 1
5.கேரட் - 1
6.இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்
7.புதினா இலைகள் - 1/4 கப் (நறுக்கியது)
8.கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
9.தேங்காய் பால் - ½ கப்
10 தேங்காய் பால் - ½ கப்
11.தண்ணீர் - 3 கப்
12.உப்பு - தேவையான அளவு
13.மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
14.மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
15.கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்
16.எண்ணெய் - 2 டீஸ்பூன்
17.பட்டை - 1 சிறிய துண்டு
18.கிராம்பு - 2
19.ஏலக்காய் - 1
20.பச்சை மிளகாய் - 1
1.எண்ணெய் - 2 டீஸ்பூன்
2.பட்டை - 1 துண்டு
3.கிராம்பு - 2
4.ஏலக்காய் - 1
5.பச்சை மிளகாய் - 1
செய்முறை
* முதலில் அரிசி மற்றும் பருப்பை கழுவி சுத்தம் செய்து, நீரை வடித்த பின் 10 நிமிடங்களுக்கு உலர விடவும்.
*லேசாக உலர்ந்த அரிசி மற்றும் பருப்பு கலவையை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
*இப்போது ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
*இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
*பின்னர் நறுக்கிய தக்காளி, கேரட் மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். காய்கறிகளுடன் மஞ்சள், தூள் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
*நீங்கள் விரும்பினால் இந்த சமயத்தில் வேக வைத்த மட்டன் கொத்துக்கறியையும் சேர்க்கலாம்.
*காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், எடுத்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்க்கவும்.
*இதனுடன் 3 கப் தண்ணீர் மற்றும் 2வது தேங்காய் பால் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
*பிரஷர் தானாக அடங்கிய பிறகு குக்கரை திறந்து, வெந்த காய்கறி மற்றும் அரிசி கலவையை மசித்து கொள்ளவும். இதற்கு மத்து அல்லது மேஷரை பயன்படுத்தலாம்.
*மசித்த கஞ்சியுடன் எடுத்து வைத்துள்ள திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து கிளறவும். முதல் தேங்காய்ப்பால் சேர்த்த பின் கொதிக்க வைக்க கூடாது. *இதன் மீது கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.
0 Comments