Main Menu

ரோட்டுக்கடை சுவையில் எளிமையான எக் ரைஸ் செய்வது எப்படி? இதோ உங்களுக்காக!

இந்த மாறி சுவையான எக் ரைஸ் செஞ்சு பாருங்க! அப்ரோம் இதுக்கு அடிமை ஆயிடுவீங்க!!! வீட்டில்  உள்ள பொருள்களை வைத்து  ரோட்டுக்கடை சுவையில் எளிமையான எக் ரைஸ் செய்வது எப்படி? இதோ உங்களுக்காக!


 

                        தேவையான பொருள்கள்

1. முட்டை 5
2. வேக வைத்த சாதம் தேவையான அளவு 
3. முட்டைகோஸ் சிறிதளவு  
4. கேரட் சிறிதளவு  
5. பீன்ஸ் சிறிதளவு  
6. பெரிய வெங்காயம் 2
7. தக்காளி 2
8. குடைமிளகாய் 2
9. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு 
10. மிளகாய் தூள் தேவையான அளவு 
11. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி 
12. கரமசாலா அரை தேக்கரண்டி 
13. உப்பு தேவையான அளவு 
14. நல்லெண்ணெய் சிறிதளவு  
15. கடுகு சிறிதளவு 
16. கடலை பருப்பு சிறிதளவு  
17. கருவேப்பிலை சிறிதளவு



                                      செய்முறை 

1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றவும். 
எண்ணெய் காய்ந்தவுடன் கடலை பருப்பை போடவும். 
2. அது பொன்நிறமாக வந்தவுடன் கடுகை போடவும். 
பொரிந்த பிறகு கருவேப்பில்லை சிறிதளவு  போடவும். 


3. பின்பு வெங்காயத்தை நீளமாக நறுக்கி எண்ணெயில் போடவும். 
உப்பு சிறிதளவு போடவும். ஏனென்றால் வெங்காயம் சீக்கிரமாக பொன்னிறமாக வருவதற்கு , பின்பு இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு , நீளமாக நறுக்கிய தக்காளி இரண்டை போடவும்.
 
4. நன்கு வெந்ததும் நீளமாக நறுக்கிய காய்கறிகள் முட்டைகோஸ் பீன்ஸ் கேரட் அல்லது உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். நன்கு வேகவைக்கவும்.




5. பின்பு மிளகாய்த்தூள் உங்களுக்கு தேவையான காரத்திற்கு போட்டு கொள்ளலாம். 
6. மஞ்சள் தூள்,கரமசாலா அரை தேக்கரண்டி போட்டு சிறிதளவு தண்ணீர்  ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். 
 
7. எல்லா காய்கறிகளும் வெந்தவுடன்,எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். 


8. நன்கு வதக்கவும். முட்டை, காய்கறிகள்,மசாலா எல்லாம் நன்கு சேர்ந்து வர கிண்டவும். 

9. பின்பு வேக வைத்த சாதம் போட்டு நன்கு கிண்டவும். 




இப்போ சுவையான எளிமையான எக் ரைஸ் தயார். 
வாங்க சாப்பிடலாம்.!!!

Post a Comment

0 Comments