Main Menu

ஃபலூடா இனி நம்ம வீட்டிலும் செய்யலாம் குளுகுளுனு அடிக்கிற வெயிலுக்கு வாங்க வீட்டையே குளுகுளுனு ஆக்கலாம்

 ஃபலூடா   இனி நம்ம  வீட்டிலும்  செய்யலாம்   குளுகுளுனு  அடிக்கிற  வெயிலுக்கு  வாங்க  வீட்டையே  குளுகுளுனு ஆக்கலாம்

தேவையான பொருட்கள்:-

1.3 தேக்கரண்டி- சப்ஜா விதைகள் (ஊறவைத்தது )

2.3 தேக்கரண்டி- சேமியா (வேகவைத்தது ) 

3.ஐஸ்கட்டி - தேவையான அளவு

4.பாதம் -தேவையான அளவு

5.பிஸ்தா-தேவையான அளவு

6.ரோஸ் சிரப்-தேவையான அளவு

7.பால் - கெட்டியான பால்

8.ஐஸ்க்ரீம் -தேவையான அளவு

9ஆப்பிள்,மாதுளை, வாழைப்பழம் -தேவையான அளவு  (நறுக்கியது)

செய்முறை 

*முதலில்ஒருகண்ணாடிகிளாசில்  ஊறவைத்த சப்ஜா விதைகளை  போடவேண்டும்
 *பின்பு சிறிது  நேரம் வேக வைத்த  சேமியாவை  போடவேண்டும் 
*அதன் பின்பு  ரோஸ் சிரப்  (இனிப்புக்கு) தகுந்தவாறு  ஊற்றிக் கொள்ள வேண்டும். 
சிறிது  அளவு ஐஸ்க்ரீம்  சேர்க்க  வேண்டும்
*பின்பு  காட்சி  ஆறவைத்த  பால்  சேர்க்கவேண்டும்
*ஆப்பிள்  மாதுளை  வாழைப்பழம் நறுக்கி  சேர்க்க வேண்டும் .
*சில சப்ஜா விதைகள், உலர்ந்த திராட்சை, நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் மற்றும் பிஸ்தாவை  படிப்படியாக  சேர்க்க  வேண்டும் 
இதோ!!! அடிக்கிற  வெயிலுக்கு குளுகுளுனு  ஃபலூடா ரெடி.   நீங்களும்  வீட்டுல  இதை மாறி  செய்து பாருங்க  அப்புறம் தினமும்  செய்விங்க. நீங்களும்  என்ன  மாறி  அடிமை  ஆகிடுவீங்க 

Post a Comment

0 Comments