Main Menu

கரைந்து போகாமல் குறைந்த செலவில் இனிப்பான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

கரைந்து போகாமல் குறைந்த செலவில் இனிப்பான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

இந்த மாறி ஈஸியா வீட்டில் செஞ்சு பாருங்க அப்ரோம் தினமும் செய்வீங்க! 

இதை சாப்டா நீங்களும் குழந்தை ஆயிடுவீங்க அவ்ளோ ருசி!!! வாங்க பார்க்கலாம்!


             தேவையான பொருள்கள்

1. அரிசிமாவு உங்களுக்கு ஏற்ற அளவு 

2. வெல்லம் இனிப்புக்கு தகுந்தவாறு 

3. நெய் தேவையான அளவு 

4. முந்திரி சிறிதளவு 

5. காய்ந்த திராட்சை சிறிதளவு

6. ஏலக்காய் சிறிதளவு 

7. பால் சிறிதளவு 

                          செய்முறை 



1. முதலில் அரிசிமாவை எடுத்து கொண்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு பிசைய வேண்டும். 

2. சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டுவரவும். பின்பு அதில் சிறிதளவு நெய் ஊற்றி உருண்டையாக அல்லது நீளமாக அல்லது உருளையாக உங்களுக்கு ஏற்ற வடிவத்தில் பிடித்துக்கொள்ள வேண்டும். 

3. பின்பு கடாயில் வெல்லம் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு கொண்டுவரவேண்டும். 




4. பின்பு பாகு பதத்திற்கு வந்தவுடன் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.பிறகு மற்றோரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் முந்திரி, காய்ந்த திராட்சை போடவும். 

5. அது பொன்னிறமாக வந்தவுடன் வடிகட்டி வைத்த பாகை ஊற்றி கொள்ளவும். இதை நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு அதில் பிடித்துவைத்த அரிமாவு உருண்டைகளை போடவும். 

6. அரிமாவு உருண்டைகள் நன்கு வெந்ததும் அதில் சிறிதளவு ஏலக்காய் தூளை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். 



இதோ உங்களுக்காக இனிப்பான பால் கொழுக்கட்டை  தயார்!!!

Post a Comment

0 Comments