இலகுவான சுவையான எல்லோருக்கும் பிடித்த தக்காளி சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்டுகள்
அரிசி -ஒரு கப்
தக்காளி - 3
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்-1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
வெங்காயம் -2 (நறுக்கியது )
பச்சை மிளகாய் - 3 எண்ணம்
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருஞ்சீரகம் விதைகள் - 1/4டீஸ்பூன்
பூண்டு-10 பல்
செய்முறை
முதலில் அரிசியை (அல்லது ஏதேனும் சமையல் அரிசி) தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அதன் பிறகு, அரிசியை ஒரு குக்கரில் 1 ½ கப் தண்ணீரில் ஊற்றி மிதமான தீயில் மூன்று விசில் விட்டு வேக வைக்கவும்.
விசில் போனதும் , அரிசியை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றவும்
அதன் பிறகு, ஒரு கடாயை எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கவும் 1 டீஸ்பூன் எண்ணெய்,1 டீஸ்பூன் நெய்,½ டீஸ்பூன் கடுகு,கறிவேப்பிலை பெருஞ்சீரகம் விதைகள் சேர்க்கவும்
பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்துவதக்கவும்
பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு, அனைத்து பொடிகளும் -காஷ்மீரி மிளகாய் தூள் , கரம் மசாலா, மஞ்சள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும்
கடைசியாக இந்த கிரேவியை சமைத்த சாதத்துடன் நெய் சேர்த்துக் கலந்து, குறைந்தது 10 நிமிடங்களாவது வேக வைக்கவும்
0 Comments