Main Menu

வாங்க சுவையான பானி பூரி செய்யலாம் வாங்க

வாங்க  சுவையான பானி  பூரி  செய்யலாம்!!!  வாங்க வாங்க இனிமேல் நம்ம  வீட்டு குழந்தைகளுக்கு  கடையில  வாங்கி  தராம வீட்டுல  ஆரோக்கியமான  முறையில் செய்து கொடுக்கலாம்...........
 
தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி –1 கைப்புடி 
  • புதினா – 3 கைப்புடி 
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி – ( சிறிய துண்டு )
  • ரவை – 1 கப்
  • மைதா – 3 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புளி  – 1 கப்( தண்ணீர்) 
  • வெல்லம் –1/3 கப்
  • உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்த) 
  • கொண்டைக்கடலை – ½ கப் (வேக வைத்த) 
  • மிளகாய் தூள் – தேவையான அளவு
  •  வெங்காயம் - 1 (நறுக்கியது) 

செய்முறை 

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா மாவு,  தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து  மாவு பதத்திற்கு பிசையவும்.
  2.  மாவை மிருதுவாக பிசைந்ததும், அதை ஈர துணியால் மூடி அரை மணி நேரம் ஊறவைக்கவும் . மாவு நன்கு ஊறி உப்பி வரும்.
  3. இப்போது, அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் புளி தண்ணீர், வெல்லம், பேரீச்சை பழம், ½ டீஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4.  நன்கு கொதித்ததை  எடுத்து அதை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது புளி தண்ணீர்ரெடி 
  5.   அடுத்து, புதினா இலையுடன், கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
  6.  அரைத்தவுடன்  அதை வடிக்கட்டி, 1 கப் தண்ணீர் சேர்க்கவும். இப்போது கிரீன் தண்ணீர்ரெடி .
  7. வேக வைத்த உருளைக்கிழங்குடன் வெங்காயம், காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள்,  சாட் மசாலா, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இப்போது பூரிக்கு நடுவில் வைக்கும்  கிழங்கு மசாலாவும் தயார்.
  8. கடைசியாக ஊற வைத்துள்ள மாவை வட்டமாக பரத்தி  எடுக்கவும் , அதனை காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும்.

 இதோ  சுவையான  பனி பூரி  ரெடி பொரித்த பூரிக்கு நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதில் புளி சட்னி வைத்து, கிரீன் சட்டினியில் மூழ்கி வாயில் போட்டால்  அட  அட   அந்த  சுவை இருக்க  அதுக்கு  நாக்கு  அடிமையாகிவிடும் 

Post a Comment

0 Comments