Main Menu

சூடான சாதத்திற்கு சுவையான ரசம் வைப்பது எப்படி .....

 சூடான  சாதத்திற்கு  சுவையான ரசம் வைப்பது எப்படி ..அதும் வெறும் இரண்டே நிமிடத்தில்  வாங்க  எப்படி  செய்யலான்னு பார்க்கலாம்

தேவையான பொருட்டுகள்

  1. மிளகு -1டீஸ்பூன் 
  2. சீரகம் -1டீஸ்பூன்
  3. சின்னவெங்காயம்-6 எண்ணம் 
  4. மல்லி இலை-தேவையான அளவு
  5. புளி-தேவையான அளவு
  6. பச்சைமிளகாய்- தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் -தேவையான அளவு
  8. வத்த மிளகாய்-3 எண்ணம்
  9. கடுகு-1/2டீஸ்பூன் 
  10. வெள்ளைப்பூண்டு-10 எண்ணம்   

செய்முறை 

  • முதலில் மிக்ஸியில் மிளகு, மல்லியிலை, மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மஞ்சள் தூள், பச்சைமிளகாய், புளி ,சீரகம்,அனைத்தையும் போட்டு  நன்றாக அரைத்து  கொள்ளவும்
  • பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும்  எண்ணெய் சூடாகிய பிறகு கடுகு போடவும்  கடுகு பொரிந்தவுடன் வத்த மிளகாய்  போடவும் 
  • பின்பு அரைத்த  வைத்த ரச மசாலாவை போட்டு  நன்றாக  வதக்கவும்  பின்பு உப்பு சேர்த்து தண்ணீர்  சேர்த்து கொதிக்க  விடாமல் தண்ணீர் நுரை   கூடியவுடன்  மல்லி இலை  நறுக்கி  தூவி விடவும்

  இப்போது மணக்க மணக்க சுவையான ரசம் ரெடி 

Post a Comment

0 Comments