Main Menu

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான, சூப்பரான சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான, சூப்பரான சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி


 தேவையான பொருட்கள்:

சிக்கன் கால்கள் – 8
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகு – 1/2 தேக்கரண்டி
சோள  மாவு – 2 தேக்கரண்டி
மைதா – 1 தேக்கரண்டி
முட்டை – 1
பிரட் தூள் – தேவையான அளவு.

செய்முறை

முதலில் சிக்கன்  துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின் பாத்திரம் ஒன்றில் முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட் , மிளகு , மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மாவு, உப்பு, புட் கலர்,சோயா சாஸ்,சில்லி சாஸ் என அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த மசாலாவில் சுத்தம் செய்து வைத்திருக்கும் லாலி பாப் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி ஓரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும். சிக்கன்  துண்டுகளை போட்டு பொரித்து கொள்ளவும் . சுவையான சிக்கன் லாலிபாப் தயார்.

Post a Comment

0 Comments