Main Menu

குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறுனு சமோசாசெய்யலாம் வாங்க

குழந்தைகளுக்கு பிடித்த மொறு  மொறுனு சமோசாசெய்யலாம் வாங்க
 

தேவையான பொருட்கள்:

* மைதா - 1 கப் 
 * எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
 * உப்பு - சுவைக்கேற்ப
 * தண்ணீர் - தேவையான அளவு 
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது மற்றும் மசித்தது) 
* பட்டாணி - 1 கப் (வேக வைத்தது) 
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) 
* சீரகம் - 1 டீஸ்பூன் 
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
* கரம் மசாலா - 2 டீஸ்பூன் 
* சாட் மசாலா - 2 டீஸ்பூன் 
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் 
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

200 கிராம் மைதா மாவில் 1/4 ஸ்பூன்  நெய் சேர்த்து உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2மணி நேரம் வெள்ளை துணியை போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு.. பச்சை பட்டாணி சேர்த்து ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.பச்சை பட்டாணி வேகும் வரை மூடி வைக்கவும்.
வதக்கிய பின் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் ,மல்லித் தூள்கரம் மசாலா,சாட் மசாலா மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக உதிர்த்துப் போட்டு மல்லித்தழை சேர்த்து கலக்கி ரெடி செய்து கொள்ளவும்.
இப்பொழுது மாவில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி பதத்திற்கு செய்து அதை இரண்டாக கட் பண்ணி முக்கோணமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்குவெங்காய மசாலாவை வைத்து மடித்து கொள்ளவும்..
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சமோசாவை பொரித்து எடுத்துக் கொள்ளவும்..


Post a Comment

0 Comments