நாவில் வைத்ததும் கரையும் சுவையான வெண்பொங்கல் செய்வது ஏப்படி?
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1/2 கப்
கருவேப்பிலை-தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
பாசி பருப்பு-1/4 கப்
நெய்-3 டீஸ்பூன்
பச்சை மிளகாய்-3
இஞ்சி துண்டு- சிறிதளவு (நறுக்கியது )
மிளகு -1டீஸ்பூன்
சீரகம் -1டீஸ்பூன்
முந்திரி -1டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாசி பருப்பை போட்டு வறுக்கவும்.
பின்பு அதனை உற வைக்கவும்.
இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சரிசி, மற்றும் பாசி பருப்பைசேர்த்து கொள்ளவும்.
பின்பு பொங்கல் நன்கு குழைய வேண்டும் 3 விசில் வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும் எண்ணெய் சூடாகியதும் அதில் ஒருடீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், பச்சை மிளகாய்,நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, முந்திரி, சேர்த்து கொள்ளவும் .
இப்பொழுது இதை குக்கரில் இருக்கும் பொங்கலில் ஊற்றி நன்கு கலக்கவும் .
பின்பு மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கலந்து விடவும்.
0 Comments