செஞ்ச அரை மணி நேரத்தில் தீர்ந்து போகும்.. ...சுவையான பருப்பு பாயசம்
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - இரண்டு கப்
பச்சரிசி - அரை கப்
வெல்லம் - முக்கால் கப்
நெய் - 6 டீஸ்பூன்
முந்திரி-தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
செய்முறை
முதலில் வேகவைத்த பாசி பருப்பை பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும். பின் அதில் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை நன்றாக கரையும் வரை கிளறி விடவும்.
வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கரைந்து வந்ததும் தேங்காய்ப் பால் சேர்த்து குறைவான தீயில் வைக்கவும். மிதமான பிறகு ஏலக்காயை தட்டி சேர்த்து கொள்ளவும். பாயசம் கொதிக்க துடங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.
பின்பு பாத்திரத்தில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அதை பாயசத்தில் சேர்த்துக் அதனுடன் சிறிதளவு துருவிய தேங்காயை நெய்யில் வதக்கி சேர்த்துக் கொண்டால் கூடுதல் சுவையை கொடுக்கும்.
0 Comments