Main Menu

வாங்க ஆட்டு கறி கோலா உருண்டை செய்யலாம்

வாங்க  ஆட்டு கறி  கோலா  உருண்டை  செய்யலாம்  மிகவும் எளிமையாக ருசியாக  இருக்கும்.

 நம்ம வீடு  குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.  

வாங்க குண்டு  குண்டுகோலா  உருண்டை  செய்யலாம்

தேவையான பொருட்டுகள்

  • ஆடு கறி - 1/4 கிலோ 
  • கடலைப்பருப்பு-3 டீஸ்பூன் 
  • சிவப்பு மிளகாய்-4 
  • பெருஞ்சீரகம்-1டீஸ்பூன்
  • வெங்காயம்-தேவையான அளவு 
  • தேங்காய் துருவல்-  தேவையான அளவு 
  • கறிவேப்பிலை-10 
  • லவங்கம் கிராம்-தேவையான அளவு(வறுத்து )
  • பொட்டு கடலை -தேவையான அளவு
  •  மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன் 
  •  உப்பு-தேவையான அளவு

செய்முறை 

  • ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  •  அதில் சிவப்பு மிளகாய், பெருஞ்சீரகம் , கசகசா மற்றும் கடைசியாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சி சேர்த்து நன்றாக வதக்கவும். 
  • வருத்ததை  ஆற  வைக்கவும் . 
  •  ஆறிய பின்பு துருவிய தேங்காய், கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள் தூள் மிக்சியில் சேர்த்து அரைக்கவும்
  • கெட்டியாக  அரைக்கவும் அரைத்த மட்டன் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்
  •  வறுத்த பொட்டுக்கடலை பொடியாக அரைத்து, அரைத்த மட்டன்  சேர்த்து நன்கு  பிசையவும்.ஒரு  பாத்திரத்தில் எண்ணெயை  ஊற்றி சூடாக்கவும்.
  • பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி  கொள்ளவும் .
  • பின்பு எண்ணெய்யில்  போட்டு  பொன்னிறமாக  ஆகும்  வரை  வறுக்கவும்

இதோ குண்டு  குண்டுகோலா  உருண்டை ரெடி  


Post a Comment

0 Comments