வாங்க மக்களே ரோட்டுக்கடை காளான் ஃபிரை செய்யலாம்ரோட்டு கடைக்கு போக தேவையில்லை: அதே சுவையில் காளான் மசாலா: வயிற்றை கெடுக்காத சுவையான ரெசிபி
தேவையான பொருட்கள்
மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 டீஸ்பூன்
கரம் மசாலா-1 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
பச்சை மிளகாய்-2
முட்டை கோஸ்-300 கிராம்
காளான்- தேவையான அளவு
அரிசி மாவு -2 டீ ஸ்பூன்
கான்பிளவர் மாவு-2 டீ ஸ்பூன்
வெங்காயம்- தேவையான அளவு
கொத்தமல்லி-ஒரு கைப்புடி
தக்காளி சாஸ்-1/4
சோயா சாஸ்-1/4
செய்முறை
இப்போது ஒரு பாத்திரத்தில், நறுக்கிய காளான், முட்டை கோஸ், அரிசி மாவு, கான்பிளவர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் பொடி, கரம் மாசாலா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
எந்தளவு என்றால் ஒரு வடை பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
பின்பு அதனை சிறு வடைகளாக எண்ணெய்யில் போட்டு பொறித்து கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்னெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து மீண்டும் மிளகாய் பொடி, உப்பு, கரம் மசாலா சேர்த்து, அதில் கான்பிளவர் மாவு கரைத்து சேர்த்துக்கொள்ளுங்கள்
அதனை கூல் பக்குவத்திற்கு வரும் வரை மிக்ஸ் செய்யவும் பின்பு அதில் பொறித்த காளானை சேர்த்து நன்றாக கிளர வேண்டும்.
கடைசியாக தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கொள்ளுங்கள். கடைசியில் நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவிக்கொள்ளுங்கள்
இப்படி ஒரு டைம் செய்து பாருங்க அப்புறம் உங்க குழந்தைகள் ரோட்டு கடைக்கு போக மாட்டிங்க
0 Comments