Main Menu

நம்ம வீட்டுல எல்லோருக்கும் பிடித்தமான சுவையானதெரளி இலை கொழுக்கட்டை செய்யலாம் வாங்க

நம்ம  வீட்டுல  எல்லோருக்கும்  பிடித்தமானசுவையான தெரளிஇலை கொழுக்கட்டை  செய்யலாம்  வாங்க   உங்க வீட்டுக்கு குழந்தைகளுக்கு இப்படிஒரு தெரளிஇலை  கொழுக்கட்டை செய்து கொடுத்து  பாருங்க அப்புறம்  உங்க வீட்டுல  தினமும்  தெரளிகொழுக்கட்டை செய்து  கொடுத்துட்டே  இருப்பிங்க  இதுக்கு  நாங்க பொறுப்பு இல்லை

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி- 2 கப் 
  • வெல்லம்- 1 கப்
  • பாசிப் பருப்பு- 1/2 கப்
  •  தேங்காய் -அரை மூடி (துருவியறது) 
  • ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
  • தெரளி இலைகள் - தேவையான அளவு

செய்முறை
 

  •  முதலில் பச்ச அரசி தண்ணீரில்1மணி நேரம் ஊற வைக்கவும் . பின்பு தண்ணீர் வடிகட்டி எடுத்து கொள்ளவும் . 
  •  பின்பு மிக்ஸீ ஜாரில் பச்சரிசி சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். அரைத்த பச்சரிசி மாவை சலித்துஎடுத்து கொள்ளவும் .
  • தனியாக வைக்கவும். அடுத்து வெல்லம் எடுத்து கால் கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் . அடுப்பில் வைத்து வெல்லத்தை நன்றாக  கரைக்கவும். பாகு காய்ச்சி  ரெடிய  ஆக்கவும்   பின்பு வெல்ல பாலை வடிகட்டி எடுக்கவும். 
  • இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாசிப் பருப்பை வறுக்கவும்.  பின்பு அதை தனியாக  எடுத்து வைக்கவும். பின்பு  அதே  பாத்திரத்தில் 1 கப்  துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். இதையும் தனியாக வைக்கவும்.  
  • இப்போது செய்து வைத்த பச்சரிசி மாவை எடுத்து அதில் வறுத்த பாசிப் பருப்பு, தேங்காய், ஏலக்காய் சேர்த்து பிசையவும் . 
  • அடுத்து வெல்ல பாகை சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும் நன்கு பிசைந்து எடுக்கவும். இப்போது இதை கையில் மாவு பிடித்து தெரளி இலையில் வைத்து உங்களுக்கு பிடித்த மாறி . தேவையான வடிவத்தில் மடித்து எடுக்கலாம். 
  • அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி வைக்கவும்.   சூடாக்கவும். இப்போது கொழுக்கட்டைகளை அதன் மேல் வைத்து  மூடி வைக்கவும். பின்பு வேகவைத்த  எடுக்கவும் 

தெரளி இலையில் கொழுக்கட்டை செய்யும் போது வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். இன்னும்  ஆரோக்கியமானதும்  கூட!!!  
 


Post a Comment

0 Comments