Main Menu

எவ்ளோ நாள் ஆனாலும் மொறுமொறு என்று இருக்கும் பூரணம் செய்வது எப்படி?

எவ்ளோ நாள் ஆனாலும் மொறுமொறு என்று இருக்கும் பூரணம் செய்வது எப்படி? 

ஒரு முறை இந்த மாறி செலவே இல்லாமல் செஞ்சு பாருங்க!!!

 குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க உங்களுக்கும் எளிதானது வாங்க பார்க்கலாம்!!!

       தேவையான பொருள்கள் 



1. அரிசிமாவு உங்களுக்கு ஏற்ற அளவு 

2. ரவை சிறிதளவு 

5. எள்ளு சிறிதளவு

6. நெய் சிறிதளவு 

7. ஏலக்காய் சிறிதளவு 

8. பொட்டுக்கடலை  தேவையான அளவு 

9. சர்க்கரை தேவையான அளவு 

10. தேங்காய் துருவல் தேவையான அளவு 

11. உப்பு சிறிதளவு

12. எண்ணெய் தேவையான அளவு 


                        செய்முறை 

1. முதலில் மிக்சியில் பொட்டுக்கடலையை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதில் இனிப்புக்கு தகுந்தவாறு சர்க்கரை  சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும். 

2. பின்பு இதில் ஏலக்காய் சேர்த்து அரைக்கவேண்டும். நன்கு பொடியாக வந்த பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் எள்ளு சேர்த்து நன்கு கிண்டவும்.





3. பின்பு அரிசிமாவை எடுத்துக்கொண்டு அதில் ரவை சிறிதளவு ,உப்பு சிறிதளவு சேர்த்து பின்பு சூடான தண்ணீர் கலந்து கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி பிசையவும். 

4. இதில் சிறிதளவு எள்ளு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பின்பு உருண்டையாக உருட்டி அதில் கொஞ்சம் நெய் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். 

5.  நன்கு ஊறவிட்ட பிறகு அதை உங்களுக்கு ஏற்ற வடிவத்தில் செய்து அதினுள்ளே முன்பு செய்து வைத்த பொடியை வைத்து மூடி கொள்ளவும். 


6. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு நாம் செய்துவைத்த பூரணத்தை எண்ணையில் போடவும். 

7. பொன்னிறமா வந்தவுடன் எடுத்துக்கொள்ளவும். 



இதோ உங்களுக்காக மொறுமொறு பூரணம் வீட்டிலே செஞ்சு பாருங்க!

Post a Comment

0 Comments