Main Menu

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவையான இனிப்பான ரசமலாய் செய்யலாம் வாங்க

குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை  விரும்பி  சுவையான  இனிப்பான ரசமலாய்  செய்யலாம்  வாங்க

தேவையான பொருட்கள்

  •  பால்- 3 லிட்டர்ஸ்(தேவையான அளவு)
  • சர்க்கரை- தேவையான அளவு
  • எலுமிச்சை பழம் -1
  • ஏலக்காய் தூள்-1 டீஸ்பூன் 
  • பிஸ்தா -1 டீஸ்பூன்
  • பாதாம்-1 டீஸ்பூன்
  • முந்திரி-1 டீஸ்பூன்
  •  சோள மாவு-1 டீஸ்பூன்
  •  குங்குமப்பூ-1 டீஸ்பூன்

செய்முறை 

  1. முதலில் ஒருஒரு பாத்திரத்தைஅடுப்பில் வைத்து அதில் ஒரு லிட்டர் அளவு பாலை ஊத்தி சுட வைக்கவும். பின்பு பாலை கிண்டி விடவும் பால் கொதிக்கும்போது எலுமிச்சை சாற்றை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்
  2.    ஏலக்காயை தூள் செய்து, முந்திரி, பாதாம், மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு பன்னீர் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் வந்து விடும்.
  3. அப்போதுஅடுப்பில் இருந்து இறக்கி ஒரு வடிகட்டி மூலமாக தண்ணீர் தனியாகவும் பன்னீர் தனியாகவும் பிரித்துக்கவும் .
  4. பின்பு பன்னீரில் 2 அல்லது 3 முறை தண்ணீர் விட்டு நன்கு கழுவி மீண்டும் கழுவி  எடுத்து  வைத்து  கொள்ளவும் .இவ்வாறு  செய்தால்  அதில்  உள்ள புளிப்பு தன்மை  நீங்கி  விடும் 
  5. அடுத்து இந்த பன்னீரை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்கு இறுக்கி கட்டி  வைக்கவும்
  6.   அப்போது அதில் இருக்கும் தண்ணீர்  முழுவதுமாக வடித்து  விடும் 
  7. இப்படியே சுமார் ஒரு  மணி நேரம்  அப்படியே வைக்கவும்.
  8. அடுத்து  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 11/2 லிட்டர் அளவு பால் மற்றும்  தேவையான அளவு சர்க்கரை சேர்த்துநன்கு கொதிக்க  விடவும் .
  9. பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் 1 டீஸ்பூன்  குங்குமப்பூ மற்றும் ஒரு 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் போட்டு ஆடை கட்டாமல் கிண்டி விட்டு கொண்ட  இருக்கவும் 
  10. இப்பொழுது  இதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முந்திரி, பிஸ்தா, மற்றும் பாதாமை போட்டு விடவும்.
  11. இப்பொழுது துணியில் கட்டி வைத்திருக்கும் பன்னீரை எடுத்து ஒரு தட்டில் போட்டு அதை நன்றாக கைகளின் மூலம்  பிசையவும் .
  12. அதில் தேவையான அளவு சோள மாவை சேர்த்து நன்கு  பிணைந்து கொள்ளவும். 
  13. சுமார்  20 நிமிடம் பிணையவும் பன்னீர் நன்கு மிருதுவான மாவு பதம் வந்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி  எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  14.  பின்பு சர்க்கரை தண்ணி  காஜி அதில் பன்னீரை மெதுவாக போடவும் 
  15. 15 நிமிடத்திற்கு பிறகு எடுத்து பார்த்தால் பன்னீர் நன்கு பெரிதாக ஊறி இருக்கும்.
  16. இப்பொழுது  சர்க்கரை தண்ணீரில் இருக்கும் பன்னீரை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும்
  17. இப்பொது  அதை  ரசமலாய்  பாலில்  பண்ணீரை  போடவும் சுமார்  2 மணி நேரத்திற்குப் பிறகு இதை எடுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து சிறிதளவு குங்குமப்பூவை அதன்  மேல் தூவிவிடவும்

இப்பொது சுவையான   ருசியான ரசமலாய் ரெடி 

Post a Comment

0 Comments