Main Menu

வீட்டிலேயே அட்டகாசமான சுவையில் பீட்சா செய்யுங்கள்


வீட்டிலேயே அட்டகாசமான சுவையில் பீட்சா செய்யுங்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, அனைவருக்கும் விருப்பமானது  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டிலேயே ஆர்டர் செய்து சாப்பிடும் அளவுக்கு பீட்சா பலருக்கும் விருப்பமான உணவாக மாறிவிட்டது.

தேவையான பொருட்கள்

  • சர்க்கரை-2 டீஸ்பூன்
  • ஈஸ்ட் -1/2டீஸ்பூன்
  • எண்ணெய்-2 டீஸ்பூன் (30 மிலி)
  • உப்பு-1டீஸ்பூன்
  • மைதா மாவு -2 கப்
  • பீட்ஸா சாஸ்- தேவையான அளவு 
  • டாப்பிங்ஸ் -வெங்காயம்,குடமிளகாய், காளான்,ஆலிவ்கள்
  • துருவிய சீஸ் – சிறிதளவு 
  • ஆரிகேனோ பவுடர் – சிறிதளவு

செய்முறை 

  • ஒரு பெரிய பாத்திரத்தில் , வெதுவெதுப்பான  தண்ணீர், எண்ணெய், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்க்கவும். ஈஸ்ட் முழுவதுமாக கரைக்க வேண்டும் .
  • மாவு, உப்பு சேர்த்து முதலில்மென்மையான மாவாக பிசையவும்.
  • ஈரமான துணியால்ஒரு மணி நேரம் வரை  மூடி வைக்கவும்.
  • ஒரு மணி நேரம் கழித்து, அது உப்பி இரட்டிப்பாக  வரும் .
  • மீண்டும் மாவை மென்மையாக நன்றாக பிசையவும்.
  • பின்பு  ஒரு வட்டமாக உருட்டி கொள்ளவும் 
  • பின்பு அதன் மேல் முட்கரண்டி கொண்டு குத்தவும்.
  •  அதன் பின்பு பீஸ்ஸா  சாஸை தாராளமாக பரப்ப வேண்டும் 
  • பின்பு சிறிது சீஸ் துருவி முழுவதுமாக  பரப்ப  வேண்டும் .
  • கடைசியாக  நீளமாக  நறுக்கிய வெங்காயம்,குடமிளகாய், காளான்,ஆலிவ்கள் மேல தூவி விடவும் 
  • பீஸ்ஸா பீஸ்ஸா பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் தடவவும் அல்லது சிறிது மாவு தூவவும்.
  • பின்பு  ஓவெனை 190 டிகிரி செல்சியஸ் (375 F)க்கு முன்கூட்டியே சூடாக்கி, 14 - 15 நிமிடங்கள் சுடவும். 
  • ஒரு பாத்திரத்தில் மாற்றவும் மற்றும் 6 அல்லது 8 துண்டுகளாக வெட்டவும்.
இப்பொது பீட்சாவை பரிமாறவும்

 

Post a Comment

0 Comments