குழந்தைகளுக்கு பிடித்தமான மோமோஸ் கடையில வாங்காம வீட்டுல செய்யலாம் வாங்க உங்க குழந்தைகளுக்கு இனிமேல் கடையில மோமோஸ் வாங்கி கொடுக்காதிங்க வீட்டுல ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்க
தேவையான பொருட்கள்
மைதா மாவு -1/2
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
முட்டைக்கோஸ்- தேவையான அளவு
கேரட் - தேவையான அளவு
பூண்டு தேவையான அளவு
வெங்காயம்-4
சர்க்கரை-1/4 டீஸ்பூன்
மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
சோயா சாஸ்-1 டீஸ்பூன்
எண்ணெய்- ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு நன்கு மிருதுவாக பிசையவும் பின்பு அதனை மூடி வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கிளறவும்.
பின்பு பூண்டு நறுக்கிய முட்டைக்கோஸ்,கேரட் , சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
பின்பு உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக நறுக்கிய வெங்காயத்தின் பச்சைப் பகுதியைச் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம்வதக்கவும் .
பின்பு மாவை ஒரு சிறிய வட்டமாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். அதன் பின்பு நடுவில் நாம் மசாலாவை வைக்கவும்.
மோமோஸ் வடிவம் கொண்டு வர அதனை உள் பக்கமாக மடியுங்கள்.
ஒரு இட்டலி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி சரியாக 7 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.
சிறியவர் முதல் பெரியவர் அவரை அனைவருக்கும் பிடித்த மோமோஸ் ரெடி
0 Comments