Main Menu

ஹோட்டல் சுவையில் பரோட்டா இனி வீட்டிலேயே செய்யலாம்

 

ஹோட்டல் சுவையில் பரோட்டா இனி வீட்டிலேயே செய்யலாம் பரோட்டா சாப்பிட இனிமே ஹோட்டலுக்கு போக வேண்டாம். நம்ம வீட்டிலேயே ஈசியா, ஹோட்டல் சுவையில் இப்படி பரோட்டா செஞ்சு பாருங்க! 

தேவையான பொருட்கள்

  • மைதா மாவு-3 கப்
  •  பால்-4 டம்ளர் 
  • சர்க்கரை-2 டீஸ்பூன் 
  • வெண்ணெய் -தேவையான அளவு
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை 

ஒரு அகலமான பாத்திரத்தில்  நன்கு சலித்த மைதா மாவை போடவும். பின்பு சர்க்கரை, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.பின்பு பாலை  ஊற்றி  நன்கு பிசையவும் இப்போது பாத்திரத்தை ஈரமான துணியால் மூடி, மாவை ஒரு மணி நேரம் அப்படியேஊற  வைக்கவும் . ஒரு மணி நேரம் கழித்து மாவை சின்ன சின்ன உருண்டைகளாகப் பிரித்து, அவற்றை உருட்டப் போகும் இடத்தில் கொஞ்சம் மாவை தூவவும். மாவு உருண்டைகளை முடிந்தவரை மெல்லியதாக தட்டவும், மீதமுள்ள எண்ணெயை அதன் மேற்பரப்பில் தேய்த்து, நன்கு அழுத்தி மெலிதாக்கவும். மாவின் ஒரு முனையில் பிடித்துக் கொண்டு, நன்கு மெல்லியதாகும் வரை வீசவும்.  அனைத்து மாவு உருண்டைகளையும் அதே போல் தயார் செய்யவும். இந்த மாவு உருண்டைகளை ஈரமான துணியால் மூடி 15 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும். அதன் பின் மாவு உருண்டைகளை நன்கு வட்டத்தில் உருட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, இந்த பரோட்டாவை இருபுறமும் சிறிது எண்ணெயை தேய்த்து நன்றாக வேகவைக்கவும், அவை நன்றாக வேக வைக்கவும் . அவை நன்கு வெந்த பிறகு, உங்கள் கைகளால் நன்றாக பரோட்டாவை அடிக்கவும் . இப்போது பரோட்டாவில் லேயர் லேயராக வரும்.

இப்போது சுவையான புரோட்டா  ரெடி

Post a Comment

0 Comments