Main Menu

ஹோட்டல் ஸ்டைலில் பூரி மசாலா வாங்க செய்யலாம்!!

இந்த மாறி ஒரு தடவை பூரி மசாலா செஞ்சு பாருங்க அப்பறோம் பூரி எல்லாம் காலி ஆயிடும்! 

எத்தனை பூரி சாப்பிட்டோம்?  என்று கணக்கே தெரியாம சாப்புடுவிங்க!!!

ஹோட்டல் ஸ்டைலில் பூரி மசாலா வாங்க செய்யலாம்!!


            தேவையான பொருள்கள்



1. உருளைக்கிழங்கு 4

2. தக்காளி 2

3. பெரிய வெங்காயம் 2

4. இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு 

5. கடலை மாவு சிறிதளவு 

6. கடுகு சிறிதளவு 

7. கடலை பருப்பு சிறிதளவு 

8. உளுந்தம்பருப்பு சிறிதளவு 

9. சீரகம் சிறிதளவு 

10. நல்லெண்ணெய் தேவையான அளவு 

11. பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப 

12. மஞ்சள் தூள் சிறிதளவு 

13. கருவேப்பிலை சிறிதளவு 

14. உப்பு தேவையான அளவு


                       செய்முறை 



1. முதலில் உருளைக்கிழங்கை வேகவைக்கவேண்டும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு ,உளுந்தம்பருப்பு, சீரகம்  இவையெல்லாம் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். 

2. இவை பொன்னிறமாக வந்த பிறகு கடுகை சேர்த்து பொறிக்க விட வேண்டும் . 



3. பின்பு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போடவும். அதில் கருவேப்பிலை சிறிதளவு போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். 

4. வெங்காயம் வெந்தவுடன் நறுக்கி வைத்த தக்காளியை போட்டு வதக்கவும். 



5. பின்பு சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் தூள் தேவையான அளவு சேர்த்து வதக்கவும். 

6. பின்பு வேகவைத்த உருளைக்கிழங்கை மசிச்சு அல்லது நறுக்கி போடவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மசாலாவுடன் உருளைக்கிழங்கு சேரும் வரை வதக்கவும். 



7. பின்பு உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும். 

8. சிறிது கடலை மாவில் தண்ணீர் ஊற்றி கலக்கி வைத்து கொள்ளவும்.இதை மசாலாவில் ஊற்றி நன்கு கிளறவும்.



அவ்ளோதான் நீங்க எதிர்பார்த்தா சுவையான பூரி மசாலா ரெடி

Post a Comment

0 Comments