Main Menu

அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி ?

அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி ? 

அதுவும் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் செய்வது எப்படி ? இதோ உங்களுக்காக ! 

மட்டனே வேண்டாம் என்று இருந்தவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க! 

குழந்தைகளுக்கு இந்த மாறி செஞ்சு குடுங்க அப்ரோம் தினமும் வேண்டும் என்று அடம்பிடிப்பாங்க!


         தேவையான பொருள்கள் 



  • மட்டன் 1/2 கிலோ 
  • சின்ன வெங்காயம் தேவையான அளவு 
  • தக்காளி 1 பழம் 
  • காய்ந்த மிளகாய் காரத்திற்கு ஏற்ப 
  • இஞ்சி 1 துண்டு 
  • பூண்டு 3 பல்லு 
  • மிளகு தேவையான அளவு 
  • சீரகம் தேவையான அளவு 
  • மஞ்சள் தூள் சிறிதளவு 
  • உப்பு தேவையான அளவு 
  • கருவேப்பிலை சிறிதளவு 
  • நல்லெண்ணெய் தேவையான அளவு 


                          செய்முறை 



  • முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தமாக எடுத்தபிறகு அதை குக்கரில் போட்டு மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு சிறிதளவு போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். 
  • பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். 

  • பின்பு 1 தக்காளி சேர்த்து காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும். பின்பு சிறிதளவு உப்பு சேர்த்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். 
  • பின்பு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கவும். பின்பு இதில் குக்கரில் வேக வைத்த மட்டனை போட்டு வேகவிட வேண்டும். 

  • பின்பு ஒரு கடாயில் மிளகு, சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும். நன்கு ஆறிய பிறகு மிக்சியில் போட்டு தூளாக அரைத்து கொள்ளவேண்டும். 
  • அரைத்த தூளை வெந்து கொண்டிருக்கும் மட்டனில் போடவும். நன்கு கிளறவும். 
  • மட்டனில் மசாலா சேரும் வரை வேகா விடவும். எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் கொத்தமல்லி இழைகளை போட்டு இறக்கி விடவும். 

  • இதோ உங்களுக்காக சுவையான சூடான மட்டன் சுக்கா வறுவல் தயார்!  

Post a Comment

0 Comments