Main Menu

வீடே மணக்கும் வெஜிடபிள் பிரியாணி செய்து பார்ப்போமா

வீடே  மணக்கும் வெஜிடபிள்  பிரியாணி  செய்து பார்ப்போமா

தேவையான பொருட்டுகள்

1. பாசுமதி ரைஸ்-1கப் 
2. உருளைக்கிழங்கு -1/4கப்நறுக்கியது
3.குடை மிளகாய் -தேவையான அளவு
4.பச்சை பட்டாணி-1/4 கப்
5.இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
6. பீன்ஸ்-1/4கப் (நறுக்கியது)
7.கேரட்- 2 எண்ணம்(நறுக்கியது)
8.மிளகாய் தூள்-1ஸ்பூன்
 9.பிரியாணி  தூள்-1ஸ்பூன்
10. காஷ்மீர் மிளகாய் தூள-1ஸ்பூன்
11. மல்லித்தூள்-1ஸ்பூன்
12. தயிர்- தேவையான அளவு 
13.எலுமிச்சை சாறு- தேவையான அளவு
14.புதினா இலை- தேவையான அளவு
15.மல்லி இலை- தேவையான அளவு
16.பட்டை,கிராம்,எல்லாக்காய் -சிறிதளவு

செய்முறை

*குக்கரை  அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடாகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்  சேர்த்து  கொள்ளவும்
* பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், புதினா, மல்லி இலை சேர்த்து வதக்கவும்.

*பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்பு  காய்கரிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
*5 நிமிடங்கள் வதக்கிய  பிறகு மசாலா பொருட்களை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

*அதன் பின் தயிர் சேர்த்து  வதக்கவும் 
*தேவையான  அளவு தண்ணீர், உப்பு சேர்த்து  இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும். 
*வெஜிடேபிள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் 10 நிமிடம் ஊறவைத்த பாசுமதி ரைஸை சேர்க்கவும்.
* எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து மூடவும்.

*குக்கரை மூடிய  பிறகு ஒரு விசில் விட்டு, அதன் பின்பு எடுத்து  குக்கர்  மூடியை  எடுத்துவிட்டு  ஒரு சமமான  தட்டு  போட்டு  மூடவும் பின்பு ஒரு பாத்திரத்தில்  குளிர்ந்த  தண்ணீரை  அதன் மேல் வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து விட்டு இறக்கினால்  சுவையான வெஜ் பிரியாணி ரெடி. 

பரிமாறும் முன்பு நெய் வறுத்த முந்திரியை சேர்த்து  பரிமாறவும் 

Post a Comment

0 Comments