ரசகுல்லா இப்படி சுலபமா சாப்ட்&ஜுஸியா,பஞ்சு மாதிரி செஞ்சு அசத்துங்க
தேவையான பொருட்கள்
கெட்டியான பால்-1 லிட்டர்
எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்
சர்க்கரை-1 கப்
தண்ணீர்-3 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு லிட்டர் பாலை ஊத்தி சுட வைக்கவும்.
இப்பொழுது ஒரு எலுமிச்சம் பழத்தை சாறை எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பால் கொதித்து போது அதில் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை ஊற்றி கலக்கவும். சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு பன்னீர் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் பிரித்து வந்து விடும்.
இப்போது அடுப்பில் இருந்து இறக்கி ஒரு வடிகட்டி மூலம் தண்ணீர் தனியாகவும் பன்னீர் தனியாகவும் பிரித்துக் கொள்ளவும்.
பின்பு பன்னீரில் 2 அல்லது 3 முறை தண்ணீர் விட்டு நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.
இவ்வாறுசெய்தால் தான் பன்னீரில் உள்ள எலுமிச்சை வாசம் நீங்கும்
அடுத்து இந்த பன்னீரை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்கு இறுக்கி இதில் இருக்கும் தண்ணீரை முழுமையாக போகும் வரை கட்டி தொங்க
விட வேண்டும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை போட்டு 6 கப் அளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கி விடவும்.
இப்பொழுது துணியில் கட்டி வைத்திருக்கும் பன்னீரை எடுத்து ஒரு தட்டில் போட்டு அதை சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக மெதுவாக பக்குவமாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொது அடுப்பில் இருக்கும் சர்க்கரை பாகை எடுத்து பில்டர் செய்து மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சர்க்கரை பாகு கொதித்ததும் அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை பாகில் போட வேண்டும்
ரசகுல்லா உருண்டைகளைப் போட்டு முதல் ஐந்து நிமிடத்திற்கு அல்லது உருண்டை நன்கு பெரிதாக ஊதும் வரை அடுப்பில் வேக வைக்கவும் உருண்டைகள் வெந்ததும் அடுப்பை குறைத்து வைத்து பாத்திரத்தின் மேலே ஒரு மூடியை போட்டுஒரு 15 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
15 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் லக்காய் தூள் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
சுமார் 6 லிருந்து 7 மணி நேரத்திற்குப் பிறகு இதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேலே துருவிய பிஸ்தா மற்றும் பாதாம் துண்டுகள் தூவி பரிமாறவும்.
0 Comments