Main Menu

கேரளா ஸ்டைலில் சுவையான சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

 நீங்க  கேரளால  எங்க  போனாலும்  எல்லா கடைகளிலும் இந்த  கட்லெட்டை   பார்க்கலாம்  வாங்க அதை நம்ம  வீட்டிலும்  செய்யலாம்  ரொம்ப இலகுவான ரெசிபி

தேவையான  பொருட்கள்

உருளைக்கிழங்கு- 4 எண்ணம் 

பெரிய வெங்காயம் -5எண்ணம் 

கறி மாசால் - 5 ஸ்பூன் 

கொத்தமல்லிதழை-சிறிதளவு

 முட்டை -3எண்ணம் 

ப்ரெட்  க்ரம்ஸ்- தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

சிக்கன் -1/4 

செய்முறை  

முதலில் உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்
இப்போது ஒரு பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை போட்டு  15 நிமிடம்  வேக  வைக்க வேண்டும்

பிரஷர் தானாக அடங்கிய பிறகு குக்கரை திறந்து, வெந்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும். இதற்கு மத்து அல்லது மேஷரை பயன்படுத்தலாம். 


பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றவும் சூடான எண்ணெயில் பெரிய வெங்காயத்தை  போடவேண்டும் சிறிது  நேரம் எண்ணெயில் பென் நிறமாக  வரும் வரை வறுக்க  வேண்டும்

பின்பு கறி மாசால் போட  வேண்டும்  பின்பு  வேகவைத்த  சிக்கனை போட  வேண்டும் பின்பு  வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு  நன்றாக  கிளற  வேண்டும்  பின்பு கொத்தமல்லிதழை போட  வேண்டும்
  இந்த கலவை ஆறியதும்,இதனுடன் 1/2கப் அளவு ப்ரெட் க்ரம்ப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.பின், தேவையான வடிவத்திற்கு மாற்றவும்.

ஒரு பௌலில்  முட்டையை  உடைத்து  ஊற்றவும் 
பின் ஒவ்வொரு துண்டுகளையும் முதலில் கரைத்த மாவில் முக்கி,பின் ப்ரெட் க்ரம்ஸ்-ல் புரட்டி தட்டில் வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து,பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு,சூடானதும், ஒவ்வொரு துண்டுகளாக சேர்த்து 2புறங்களிலும் சிவக்க பொரிக்கவும்.


விரும்பினால், குறைவான எண்ணெய் சேர்த்து shallow fry செய்து கொள்ளலாம்.

இதோ!!! கேரளா ஸ்டைலில்  சுவையான  சிக்கன் கட்லெட் ரெடி 






Post a Comment

0 Comments