மணமணக்கும்.. ருசியான... கனவா மீன் வறுவல் செய்யலாம் வாங்க
தேவையான பொருட்டுகள்
கனவா மீன்-1 kg
மிளகாய் தூள்-1டீஸ்பூன்
கரம் மசாலா-1/4டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1/2டீஸ்பூன்
சின்ன வெங்காயம்- தேவையான அளவு
பச்சை மிளகாய்-2
மிளகுத்தூள்-1
கறிவேப்பிலை-ஒரு கைப்புடி
எண்ணெய்-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
- கனவா மீனை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும் பிறகு நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்...
- இதனுடன் மிளகாய்த் தூள், கரம் மசாலா உப்பு, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக 40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு ஊற வைத்த கனவா மீனை சேர்த்து மிதமான 3 நிமிடம் வேகவைக்கவும் பிறகு இதனை மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் தண்ணீர் விடத் தேவையில்லை கனவா மீனில் இருந்து தண்ணீர் வெளியேறும்.
- கனவா மீன் வெந்த பிறகு இதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும் 10 நிமிடத்தில் சுவையான அட்டகாசமான கனவா மீன் வறுவல் ரெடி
கனவா மீன் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது :
இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.
இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
.
கனவா மீனின் பல்வேறு நன்மைகள் அதை உங்கள் உணவில் சேர்க்க சிறந்த உணவாக இருக்கிறது
0 Comments