ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு சூப்பரான இன்னும் சுவையான முட்டை பஜ்ஜி! எத்தனை சாப்பிட கொடுத்தாலும் பத்தல என்பார்கள்!
தேவையான பொருட்கள்
முட்டை -3
கடலைமாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மூணு முட்டை இருந்தால் போதும், 10 பஜ்ஜி வரைக்கும் சுட சுட மொறு மொறுன்னு சுட்டு அசத்தலாம். அதற்கு முதலில் மூன்று முட்டைகளை உடைத்து ஒருபாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
முட்டை நன்கு கலந்து வைத்த பின்பு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் விட்டு எல்லா இடங்களிலும் சமமாக பரப்பி விடுங்கள்.
பின்புதோசை கல் முழுவதும் நிறையுமாறு முட்டையை ஊற்றி விடுங்கள். எண்ணெயிலேயே முட்டை நன்கு வெந்து வந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டுக் கொள்ளுங்கள். .
இப்போது இந்த ரவுண்ட் ஷேப் முட்டையை வாழைக்காய் பஜ்ஜி போடுவது போல நீள வாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்
இப்பொது பஜ்ஜி மாவில் போட்டு இரு புறம் மாவில் போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
0 Comments