தந்தூரி சிக்கன் செய்வது எப்படி
வாங்க நம்ம குழந்தைகளுக்கு சுவையான தந்தூரி சிக்கன் செய்து அசத்துவோம்
தேவையான பொருட்கள்
- சிக்கன்- முழு கோழி(4துண்டுகளாக
- தக்காளி-1
- தயிர்-தேவையான அளவு
- குறு மிளகு -1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-தேவையான அளவு
- கருவேப்பிலை- ஒரு கைப்புடி
- உப்பு-தேவையான அளவு
- மிளகாய் பொடி-தேவையான அளவு
- கலர் பொடி-ரெட் கலர்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- முதலில் தக்காளியை அரைத்து நான்ஸ்டிக் பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் இஞ்சி பூண்டு தயிறு குறுமிளகு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
- இப்போது அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் கலர் பொடி சேர்த்துக் கொள்ளவும் அதனை நன்றாக கலக்க வேண்டும்
- இப்போது சிக்கன் பீஸை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவேண்டும் ஒரு மணி நேரம் கழித்து அந்த சட்டியை அப்படியே அடுப்பில் வைத்து வேக வைக்கவும்
- வெந்த பிறகு தந்தூரி பேனை அடுப்பின் மேல் வைத்து சிக்கன் மேலே வைத்து ரோஸ்ட் செய்யவும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து திருப்பி விட்டு ரோஸ்ட் செய்யவும்
சுவையான தந்தூரி சிக்கன் தயார்
0 Comments