Muslim style Kuska: ருசியான பாய் வீட்டு குஸ்கா.. ஈஸியாக எப்படி செய்யலாம் தெரியுமா?
தேவையான பொருட்கள்
- நெய்-1 டீஸ்பூன்
- எண்ணெய்-தேவையான அளவு
- வெங்காயம்-தேவையான அளவு
- தக்காளி-3 எண்ணம்
- பச்சை மிளயாய்-2
- உப்பு-தேவையான அளவு
- மல்லி இலை-ஒரு கைப்புடி
- புதினா-ஒரு கைப்புடி
- இஞ்சி,பூண்டுபேஸ்ட் -தேவையான அளவு
- பட்டை-2
- கிராம்பு-2
- ஏலக்காய்-3
- அண்ணாச்சி பூ-2
- சோம்பு-தேவையான அளவு
- பிரியாணி இலை-தேவையான அளவு
- மல்லித்தூள்-1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள்-1 டீஸ்பூன்
- தேங்காய் பால்-ஒரு கப்
- தயிர்-ஒரு கப்
- முந்திரி பருப்பு-10
- எலுமிச்சை பழம்-ஒன்
செய்முறை
ஒரு குக்கரில்தேவையான அளவு ,எண்ணெய் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் 4 ஸ்பூன் எண்ணெய்யை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 3 ஏலக்காய், 2 கிராம்பு, 2 அண்ணாசி பூ, 2 பட்டை, இரண்டு பிரியாணி இலை ஒரு ஸ்பூன் சோம்பு
சேர்க்க வேண்டும். சோம்பு பொரிந்த பிறகு அதில் 3 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதில் அரிசிக்கு தேவையான அளவு பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
பெரிய வெங்காயம் நன்றாக வதங்கிய பின் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் இரண்டு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் ஒரு ஸ்பூன் கரம் மசாலா மற்றும் ஒரு ஸ்பூன் மல்லி தூளை சேர்த்து வதக்க வேண்டும். அதில் ஒரு கைபிடி மல்லி இலை மற்றும் புதினாவை சேர்த்து வதக்க வேண்டும். அதில் அரை கப் தயிரை சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
0 Comments