Main Menu

Prawn Biryani Recipe: சுவையான இறால் பிரியாணி

Prawn Biryani Recipe: சுவையான இறால் பிரியாணி
கடல் உணவுகளை விரும்பி சாப்பிடும் நீங்கள் கண்டிப்பாக இறால்களின் பிரியராக இருப்பீர்கள். இந்த பண்டிகையின் போது இறாலை வைத்து சுவையான பிரியாணி தயார் செய்யலாம். இப்போது அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

தேவையான பொருட்டுகள்

  • இறால்-1/2 கிலோ 
  • பாஸ்மதி அரிசி-2 டம்ளர் 
  • வெங்காயம்-3
  • தக்காளி- 2
  • பச்சை மிளகாய்-3
  •  கொத்தமல்லி- சிறிதளவு 
  • புதினா-சிறிதளவு
  •  மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்-1ஸ்பூன் 
  •  உப்பு-தேவையான அளவு 
  •  இஞ்சி பூண்டு- 1ஸ்பூன் 
  •  தயிர்-1 கப் 
  • பட்டை-1
  • கிராம்பு-2
  • பிரியாணி இலை-2
  •  சோம்பு-1ஸ்பூன்
  •  எண்ணெய்-தேவையான அளவு
  •  நெய்-தேவையான அளவு

 செய்முறை 

  • மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி, பூண்டு, வறுத்த வெங்காயம், கரம் மசாலா, கால் கப் தயிர்.. இறால் சேர்த்து நன்கு மிஸ் பண்ணவும் 
  • அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயைச் சூடாக்கி இறால்களைச் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  • பிறகு  தயிர்,  கொத்தமல்லி மற்றும் வறுத்த இறால் சேர்த்து தனியாக வைக்கவும்.
  • இப்பொது பாசுமதி அரிசியை  சிறிது  நேரம் வேக  வைக்கவும் 
  • இப்போது பாதி சமைத்த அரிசியை நெய் ஊற்றி பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும்.
  • பிறகு இறால்களைச் சேர்க்கவும். பின்னர் மீதமுள்ள அரிசியை போடவும் 
  • இப்போது கடாயை மூடி தீயை குறைத்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
  • பொன்னிறமாக வறுத்த வெங்காயம், கொத்தமல்லி மேலே  தூவி  விடவும் 

அவ்வளவுதான் சூடான இறால் பிரியாணி ரெடி.



 

Post a Comment

0 Comments